Home இலங்கை அரசியல் யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

0

யாழில் (Jaffna) நீடித்துவரும் காணி விடுவிப்பு விவகாரம் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வவலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 6,376 ஏக்கர் நிலப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் நிலப்பரப்புகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு வந்தனர்.

மொத்தமாக காணிகளை விடுவிக்கக்கோரி 2,276 வழக்குகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு 2,900 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலவிடுவிப்பு கேள்விக்கு உள்ளானது.

2022க்கு பின்னர் ஏறக்குறைய 600 ஏக்கர் நிலப்பகுதி வரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், 2024 ஆம் ஆண்டு ஏறக்குறைய 400 ஏக்கர் நிலப்பகுதிகள் வலி வடக்கின் பல பகுதிகளை உள்ளடக்கி விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 235 ஏக்கர் நிலப்பகுதி மாத்திரம்தான் விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டாலும், குறித்த காணிகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இராணுவ வேலிகள் அகற்றப்படாமையின் காரணமாக குறித்த தமது நிலப்பகுதிக்கு செல்வதற்கும் குறித்த காணிகளுக்குள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

காணி விடுவிப்பு விவகாரத்தில் யாழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவருவதென்பது, நடைபெற இருககின்ற தேர்தலில் பிரதிபலிப்பினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பான மக்களின் சாட்சியங்களை உள்ளடக்கிய ஒளியாவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/i42s3cUN2Io

NO COMMENTS

Exit mobile version