Home முக்கியச் செய்திகள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

0

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(m.k.stalin) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“இன்று (21) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்ப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம்  வெளியிட்ட அறிவிப்பு

 இதேவேளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய மருத்துவ அறிகுறிகள் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version