நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட
வேட்பாளர் அறிமுக கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்
விடுதி ஒன்றில் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
வேட்பாளர் குழு
அக்கட்சியானது, வன்னி மாவட்டத்தில் இம்முறை சு.தவபாலனை முதன்மை வேட்பாளராகவும், எ.செல்வநாயகம், றொசின் பெர்ணான்டோ,
தி.கிந்துஜன், தே.தினேஸ்குமார், பா.ஆனந்தபிரசாத், ச.ரகுமதி, சோ.பிரசாத்,
அ.ரொணிடிமல் ஆகியோரை கொண்ட வேட்பாளர் குழு சைக்கிள் சின்னத்தில்
களமிறங்கியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.