Home இலங்கை அரசியல் போராளிகள் குடும்ப நலக் காப்பகம் தமிழ் தலைமைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை

போராளிகள் குடும்ப நலக் காப்பகம் தமிழ் தலைமைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை

0

தமிழ் மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள்
தனித்துவத்துடன் ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை
உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கட்சிகளிடம் மாவீரர்கள் போராளிகள்
குடும்ப நலக் காப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று(05.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்

“2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்றப் பொதுத்
தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடும் அரசியல்
கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் என சகல தரப்புகளும், மக்களின் நலன் கருதி நீண்ட
காலமாகவே எமது மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் அபிலாசைகளை உண்மையாகவும்
உறுதிப்பாட்டுடனும் அடைவதற்கான இன்றியமையாத பின்வரும் நான்கு அம்சக்
கோரிக்கைகளை தமிழ்மக்களின் நலன் கருதி எம் அமைப்பானது முன்வைக்கின்றது.

இதற்கமைய குறிப்பிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு
அரசியல் கட்சிக்கும் அல்லது வேட்பாளர்களுக்கும் எமது அமைப்பானது ஆதரவு
வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கும் என்பதனை பொதுமக்கள் முன்னிலையில்
வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

முழுநாட்டிலும் மாற்றத்தை எதிர் பார்க்கின்ற மக்கள் இருக்கின்ற போதிலும் தமிழ்
மக்கள் சிங்கள பெரும்பான்மைக்குள் கரைந்து போகாமல் தங்கள் தனித்துவத்துடன்
ஒற்றுமையாக ஒருசேர நின்று மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களத்தை உருவாக்கிக்
கொடுக்க வேண்டியது கட்சிகளினதும் அரசியல் பிரமுகர்களினதும் தலையாய கடமையாகும்.

தமிழர்களின் அரசியல் தீர்வு 

இதற்கான அழுத்தங்களினை பொது அமைப்புக்கள் இந்தக் குறுகிய நாட்களில் மிக
வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டும்.

1. தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான எந்த முன்னெடுப்பும் திம்பு
கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தாயகம், தேசியம், சுயநிர்ணயம் உள்ளடங்கலான
இறுதித்தீர்வை எட்டும் நோக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

2. நடைபெற்று முடிந்த இன அழிப்பிற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன
அழிப்பிற்குமான பரிகார நீதியைப்பெறும் நோக்குடன் சர்வதேச நீதிக்கான பொறிமுறை
உள்ளடக்கப்பட வேண்டும்.

3. இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினைப் பெறும் நோக்குடன் சிங்கள
அரசாங்கத்தோடு தமிழர் தரப்பால் முன்னெடுக்கப்படும். எந்தவொரு பேச்சு
வார்த்தையிலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய மூன்றாம் தரப்பு நாடு ஒன்றின்
நடுநிலையுடன் முன்னெடுக்கப்படவேண்டும்.

4. நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பழைய அரசியல் பிரமுகர்கள்
வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட்டு சமூகப் பொறுப்புள்ள
அறிவார்ந்த இளைஞர், யுவதிகள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுவது எம்
இனத்தின் எதிர்காலத்திற்குத் தவிர்க்கப்படமுடியாத தேவையாக உள்ளது.

அத்தோடு இதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆண்களுக்கு நிகராக 50 வீதம்
வழங்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமாக கொள்ளப்பட வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version