நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான ஜே.வி.பி பாரிய வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
பாரம்பரியமாக அரசியலில் இருந்த மூத்த அரசியல்வாதிகள் பலரின் அரசியல் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டு புதிய அரசாங்க முறைமை உருவாக்கப்பட்டமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழர் பிரதேசங்களிலும் மக்களின் வாக்குகளானது பாரம்பரிய தமிழ்கட்சிகளை விடுத்து அநுரவின் கட்சியை நோக்கி நகர்ந்துள்ளமை தமிழ் அரசியல்வாதிகள் மத்தியிலும் மற்றும் தமிழ் அரசியல் சமூகத்திலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கலாச்சாரம்
இந்தநிலையில், இது தொடர்பாக ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள மக்கள் “50 வருடக்காலம் நடந்த அரசியல் கலாச்சாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
ஏற்கனவே, ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியின் வெளிபாடுதான் தற்போது வந்துள்ள மாற்றம்.
நேர்மையாக அரசியல் நடத்தினால் மாத்திரமே அரசியல் அதிகாரம் எதிர்காலத்தில் உண்டு என்பதை அரசியல்வாதிகளுக்கு நினைவுவூட்டியுள்ளளோம்.
தமிழ் கட்சிகளின் பிளவு
இவ்வளவு காலம் தொடர்ந்த இன மற்றும் மத வேறுப்பாட்டிலான அரசியலை தகர்த்தி இனி வரும் காலங்களில் ஒற்றுமையாக வயோதிப அரசியல்வாதிகளை நீக்கி இளைஞர்களுக்கான வாய்ப்பை வழங்க தகுந்த சூழலை ஏற்படுத்தியுள்ளளோம்.
14 ஆம் திகதி நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வாத ஜனாதிபதி தெரிவித்திருந்தார் அதே போல தற்போது அவர் அதை நடத்திக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தமிழ் பிரதேசங்களின் மூத்த தமிழ் கட்சிகளின் பிளவும் மற்றும் ஒற்றுமையின்மையே நாங்கள் மாற்றத்தை தேட காரணம்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தற்போது அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் நாங்கள் எதிர்பாத்தது மாற்றம் அந்த மாற்றத்தை நாட்டின் மக்களாக நாங்கள் ஏற்படித்தியுள்ளதுடன் இனி அபிவிருத்தயை நோக்கி பயணிப்போம் என நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.