Home இலங்கை அரசியல் மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது : யாழில் தமிழ் கட்சிகள் வியூகம்

மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது : யாழில் தமிழ் கட்சிகள் வியூகம்

0

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு
எவ்வாறு வடமாகாணத்தை கைப்பற்றுவது எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது
தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள
தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தலைமையில் இந்த தமிழ்
கட்சிகளின் கூட்டம் மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம்
அடைக்கலநாதன், முருகேசு சந்திரகுமார், வேந்தன் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின்
தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 கட்சிகளின் நிலைப்பாடு

குறிப்பாக அடுத்த வருடம் அளவில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதாக அரசாங்கம்
கூறியுள்ள நிலையில் அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு
காணப்படுகின்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவது என்பன தொடர்பில் முன்னாள்
முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தலைமையில் இந்த கூட்டம் இரண்டு
மணித்தியாலங்களாக இடம்பெற்றிருந்தது.

 குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கும் இந்த கூட்டத்தில்
கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த
போதும் M.A சுமந்திரன் சுகயீனம் காரணமாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது

NO COMMENTS

Exit mobile version