Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சுயநலவாதிகள்! குற்றஞ்சாட்டும் கட்சித் தரப்பு

தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் சுயநலவாதிகள்! குற்றஞ்சாட்டும் கட்சித் தரப்பு

0

தமிழரசுக்கட்சியின் (ITAK) மீது நம்பிக்கையில்லாதவர்கள் தான் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் கொள்கைக்காக வெளியேறவில்லை, சுயநலத்திற்காகவே வெளியேறியுள்ளார்கள் என கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  ‘‘ தமிழர்களின் ஒற்றுமைாக கருதப்படுவது தமிழரசுக்கட்சியும் ,தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒன்றிணைவது தான்.

கட்சி ஒற்றுமையாகதான் இருக்கின்றது. சுமந்திரன் (M. A. Sumanthiran)  அணி சிறீதரன் ( Sridharan)  அணி என்று பிரிவினை இல்லை.

தமிழரசுக்கட்சி எந்தவொரு தனிநபரையும் தங்கி நிற்கவில்லை அது ஒரு சுயாதீனமான பாரம்பரிய கட்சி.கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளது‘‘ என்றார்.

இதேவேளை,
தமிழ் மக்கள் கூட்டணியினர் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தியிருந்தனர்.

எனினும் அதற்கான கணக்கறிக்கையை வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தற்போதும் பொது வேட்பாளரும், தமிழ் மக்கள் கூட்டணியினரும் பிரிந்துள்ளனர்.

தற்போது தமிழர்களின் ஒற்றுமை எங்கே?

புலம் பெயர் நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட பணம் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி பெறப்பட்டதா?

போன்ற விடயங்களை அலசி ஆராய்கின்றது கீழுள்ள காணொளி… 

https://www.youtube.com/embed/9nVBGNyYaQQ

NO COMMENTS

Exit mobile version