Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழர் தாயக கட்சி

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழர் தாயக கட்சி

0

வடக்கு கிழக்கை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் தாயக கட்சி ரணில்
விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இன்று (18) வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கட்சியின் தலைவர் த. இதயலால் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கின்ற
ஒரு நிலைப்பாட்டில் ரணிலிற்கு ஆதரவு தெரிவிக்க
தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தாயக கட்சி

அத்தோடு, எவரும் நாடு பாதாளத்தில் இருக்கின்ற போது பொறுப்பேற்காத போது தத்துணிவோடு
செயல்பட்ட அவரை மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்ற நோக்கோடு இந்த
தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு இளைஞர் அணி தலைவர் மு.
முகுந்தகஜன் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/tamil-party-supports-ranil-in-election-1726646783

NO COMMENTS

Exit mobile version