Home இலங்கை அரசியல் மகிந்த – கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: லக்ஷ்மன் கிரியெல்ல சாடல்

மகிந்த – கோட்டாபய போல் ரணிலும் தமிழர்களின் எதிரி: லக்ஷ்மன் கிரியெல்ல சாடல்

0

மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைப் போல் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களின் எதிரி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் கூறியுள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு எதிராகவே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு

அதிபர் தேர்தலில் சிங்கள மக்கள், தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வெற்றியடைவார் என்று நம்பிக்கை வெளியிட்ட கிரியெல்ல, சஜித்தின் ஆட்சியில் அரசியல் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

சஜித் பிரேமதாஸ எப்போதும் மக்கள் பக்கமே நிற்பார் என்றும், அவர் எந்த அரசியல் தலைவருடன் பகிரங்க விவாதத்துக்குத் தயாராக இருக்கின்றார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

Source: https://ibctamil.com/article/tamil-people-against-ranil-kiriella-1714258467

NO COMMENTS

Exit mobile version