தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திறந்து
வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இலக்கம் 58,
இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் குறித்த அலுவலகம் அந்தக்
கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து
வைக்கப்படவுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு
இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும்
கலந்து கொள்ளுமாறு அந்தக் கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான
வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால்
ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
