Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

0

பொது வேட்பாளரையும் புறக்கணித்து நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலையும் புறக்கணிப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தெற்கில் இருக்கும் எந்தவொரு தலைவரையும் நம்மதயாராக இல்லை என்ற செய்தியை வழங்க வேண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் இன்று 02.05.2024 மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சந்திப்பில் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் க.குகன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஶ்ரீ பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.

வடக்கில் திடீர் சுற்றிவளைப்பு: முதன் முறையாக பறிமுதல் செய்யப்பட்ட கோடிகணக்கிலான சொத்துக்கள்

இரண்டாவது விருப்பு வாக்கு

அதன்போது, பொது வேட்பாளர் என்பது அதிபர் ரணில் விக்ரமசிங்கிவிற்கு இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சியாகும் அதற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் அடி பணியக்கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகள் தொடர்பில் இன்று தமிழ் மக்கள் ஒரு நல்லபிப்பிராயத்தினை கொண்டுள்ளதாகவும் பொது வேட்பாளரையும் புறக்கணிப்பதோடு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.   

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படும் காலம் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version