Home இலங்கை அரசியல் இந்தியா போன்ற வல்லரசு நாடுகளின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது : தர்மலிங்கம் சுரேஸ்...

இந்தியா போன்ற வல்லரசு நாடுகளின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள முடியாது : தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு

0

இந்தியா (India) போன்ற வல்லரசு நாடுகள் தங்களின் நலனுக்காக தமிழ் மக்களை அடக்கியாள
முடியாததோடு தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அநியாயங்களை எமது அடுத்த
சந்ததிக்கு கொண்டு செல்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய
அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய படைக்கு எதிராகவும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை வலியுறுத்தியும்
மட்டக்களப்பில் (Batticaloa) சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம்
அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆரம்பமான அன்னையின் உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (19) மட்டக்களப்பினை
வந்தடைந்துள்ளது.

குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரிகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

நினைவுத்தூபி

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988ஆம் ஆண்டு மார்ச்
19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை அன்னையர் முன்னணி சார்பில் ஆரம்பித்த
அன்னை பூபதி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார்.

இதன்காரணமாக இன்று அவர் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த இடத்தில்
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதுடன் அகவணக்கம்
இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நினைவு ஊர்தியில் தியாக தீபம் அன்னையின் உருவப்படத்திற்கு
மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அன்னை பூபதியின் மகள் சாந்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என
பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மட்டக்களப்பின் பல்வேறு இடங்களுக்கு ஊர்தி செல்லவுள்ளதுடன் நாளை
பிற்பகல் 04 மணிக்கு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து
நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபிக்கு ஊர்வலமாக செல்லவுள்ளதாக
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! தங்கம் மற்றும் எண்ணெய்யின் விலை திடீரென உயர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version