Home இலங்கை அரசியல் ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் : சிறீதரன் காட்டம்

ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் : சிறீதரன் காட்டம்

0

Courtesy: Subramaniyam Thevanthan

நாங்கள் ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டோம் ரணில் பிரபா ஒப்பந்தம் இலங்கை
இந்திய ஒப்பந்தம் மூலம் தீர்வு கிடைக்கும் என நினைத்தோம் எல்லாமே எங்களுக்கு
முன்னால் இல்லாமல் போனது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசு உரிமை கோராத காணிகளை

மேலும் தெரிவிக்கயைில், காலம் காலமாக சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம்.

அறவழிப்போராட்டங்கள்
தோற்கடிக்கப்பட்ட போதே எமது இளைஞர் ஆயுதத்தை எடுத்தனர். குறிப்பாக, எங்களுடைய இறைமையை
மீட்டெடுக்க போராடுகின்றோம்.

கடந்த 10ஆண்டுகளாக சம்பந்தன் தலைமையில் பல
பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் நாம் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.

28ஆம் திகதி வர்த்தமானி வெளிவந்திருக்கிறது. அரசு உரிமை கோராத காணிகளை
சுவீகரிக்க முனைகிறது. இதில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ நினைக்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பலர் காணியின்றி உள்ளனர்.

பிமல் ரத்நாயக்கா கேட்கின்றார் உப்பின் பெயர் வேணுமா சுவை வேணுமா என்று
எங்களுடைய மண்ணுக்குரிய பெயரை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version