Home இலங்கை அரசியல் 25 கோடி ரூபாவை இழந்த தமிழ் மக்கள்! எம்.பிகளின் பொறுப்பற்ற செயல்

25 கோடி ரூபாவை இழந்த தமிழ் மக்கள்! எம்.பிகளின் பொறுப்பற்ற செயல்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான 25 கோடி ரூபாய் இழக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

குறித்த பதிவுகளில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்முறை ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஐந்து கோடிகள் ஒதுக்கப்பட்டது.

மக்களின் கேள்வி

அதற்கான திட்டத்தினை குறித்த காலத்திற்கு முன்பாக முன்வைக்காமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்களது ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசினால் மக்களுக்கு ஒரு சில அபிவிருத்திகளை செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற குறித்த நிதியையே மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியாத நாடாளுமன்ற உறுப்பினர்களா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/tamil-politicians-in-sri-lanka-1714528562

NO COMMENTS

Exit mobile version