Home இலங்கை அரசியல் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன் எம்.பி

தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளை சபையில் நினைவுகூர்ந்த சிறீதரன் எம்.பி

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) ஆறுதல் தெரிவித்தார்.

இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய நாட்டிலே இன்றைய நாள் மிக முக்கியமான நாள்.  இலங்கையிலே யாழ்ப்பாண மாவட்டத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்ததுடன் 50 பேர் படுகாயமடைந்தனர்.

மிக முக்கியமாக 15 வயது மாணவனாக இருந்த வேலுப்பிள்ளை கேசவராஜன், 26 வயதான பரஞ்சோதி சரவணபவன், 32 வயதான வைத்தியநாதன் யோகநாதன், 52 ஜோன் பிடலீஸ் சிம்மரிங்கம், 53 வயதான புலேந்திரன் அருளப்பு, 21 வயதான இராசதுரை சிவானந்தம், 26 வயதான ராஜன் தேவரட்ணம், 56 வயதான ஆயுள் வேத வைத்தியர் சின்னத்துரை பொன்னுத்துரை, 14 வயது மாணவனான சின்னத்தம்பி நந்தகுமார் ஆகியோர் அல்பிரட் துரையப்பா மேஜராக இருந்த போது தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாண மண்ணிலே நடைபெற்ற அந்த நாளில் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர். 

அவர்களுக்கான 51ஆவது வருட நினைவு நாளான இந்த நாளில் அவர்களையும் இவ்விடத்தில் நினைவில் கொண்டு அந்த குடும்பங்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.


https://www.youtube.com/embed/uMDsDhw2kUI

NO COMMENTS

Exit mobile version