புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் தமிழில் வழிபாடு செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை என தமிழறிஞர் மு.பெ. சத்தியவேல் முருகனார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக வடமொழி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழ் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரிரவில் இதனை மாற்ற முடியாது என்ற போதிலும் தமிழர்கள் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
