Home இந்தியா பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி

பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி

0

பல வருட கனவுகளுடன் லண்டனில் புதிய வாழ்க்கையைத் தொடங்க புறப்பட்ட பிரதிக் ஜோஷி குடும்பத்தினர் எயார் இந்தியா விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் பலரிடமும் ஆழ்ந்த சோகத்தையும் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் நினைவூட்டியுள்ளது.

பிரதிக் ஜோஷி, ஒரு மென்பொருள் நிபுணர், கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் வாழ்ந்துவருகிறார்.

தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இந்தியாவில் வசித்து வந்தனர்.

நீண்டகால கனவு

தனது குடும்பத்தையும் தன்னுடன் சேர்த்து, வெளிநாட்டில் ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பதே அவரது நீண்டகாலக் கனவாக இருந்தது.

பல வருடங்களாக பல வருடங்களாக உரிய அனுமதிகளுக்காக காத்திருந்த பிறகு, அந்தக் கனவு இறுதியாக நனவாகியது.

அதனை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, உதய்பூரில் புகழ்பெற்ற மருத்துவரான அவரது மனைவி கோமி வியாஸ் தனது வேலையை விட்டு விலகி கனவுகளை நனவாக்க கிளம்பியிருந்தார்.

இறுதி செல்ஃபி

இந்த நிலையில், இன்று காலை, ஐந்து பேர் கொண்ட அந்த குடும்பம் எயார் இந்தியா விமானம் 171-ல் லண்டன் நோக்கி புறப்பட தயாராகியருந்தது.

விமானத்தில் ஏறும் முன் எடுத்த செல்ஃபி ஒன்றை உறவினர்களுக்கு அனுப்பியிருந்தனர். ஆனால் அந்த ஒரு செல்ஃபி, அவர்கள் வாழ்கையின் கடைசி ஒற்றுமையான தருணமாக மாறியது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த மொத்த பயணிகளில் ஒருவரை தவிர யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்த துயரச் செய்தி வாழ்க்கை எவ்வளவு மோசமாகவும் எதிர்பாராதவிதமாகவும் திரும்ப முடியும் என்பதற்கான கடும் நினைவூட்டலாக அமைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version