Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

தமிழரசுக் கட்சியை நம்பி வாழும் தமிழ் பேசும் மக்கள் : அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டு

0

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம்களும் தமிழரசுக் கட்சியை (ITAK) நம்பித் தான் வாழ்கின்றார்கள், ஏனைய கட்சிகளை நம்பவில்லை என அரசியல் ஆய்வாளர் எம். எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிப்பது குறித்து தமிழரசுக் கட்சியினர் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளனர். அவ்வாறின்றி கட்சியின் பொதுவான தீர்மானமாக இருக்க வேண்டும்.

மாவை சேனதிராஜா குறிப்பிட்ட காரணம் 

மாவை சேனாதிராஜா சுகவீனம் காரணமாக மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என நல்லூர் கோவிலுக்கு முன் சத்தியம் செய்து சொல்ல வேண்டும். அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமைக்கு சொல்லுகின்ற காரணம் பொய். இவ்வாறு சில்லறைத் தனமாக செயற்படக் கூடாது.

திட்டமிட்டு கூட்டத்திற்கு போகவில்லையா அல்லது சுகவீனம் காரணமாக போகவில்லையா என்பதை உண்மையாக சொல்ல வேண்டும். கூட்டத்திற்கு போகாமல் விட்டுவிட்டு இது கட்சியின் முடிவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து மேலும் பல விடயங்களை கீழுள்ள  காணொளியில் காண்க….

https://www.youtube.com/embed/yrECfSDUfBw

NO COMMENTS

Exit mobile version