தமிழர் விடுதலைக் கூட்டணி (Tamil United Liberation Front) வடக்கு, கிழக்கிற்கு அப்பால் தெற்கிலும்
போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் (Mylvaganam Thilakarajah) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் (Kilinochchi) அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (10-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த 75
ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி அமைப்புக்கு மாறாக கிராமிய மட்டத்திலிருந்து
ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டி
அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை
மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட உள்ளது.
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்சிகளும் வேட்புமனுத் தாக்கல் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.