தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியின் தோல்வியின் பின்னர் தென்னிலங்கையில் சுமந்திரனுக்கு இருந்த அபிப்பிராயம் தற்போது இல்லை என அரசியல் ஆய்வாளர் யதீந்திரா தெரிவித்துள்ளார்.
அதாவது சம்பந்தனுக்கு பின்னர் தமிழ் மக்களை வலிநடத்தும் தலைவராக சுமந்திரன் காணப்படுவார் என அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியினை தழுவியிருந்தார்.
இந்நிலையில், தமிழரசுக்கட்சிக்கு தலைவராக வந்து அவர் செய்ய திட்டமிட்டிருந்த திட்டங்கள் அனைத்தும் குழப்பப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே ஓய்வுபெறவிருந்த சம்பந்தனை மீண்டும் களத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,