Home இலங்கை அரசியல் ஸ்டாலினிடமிருந்து டக்ளஸிற்கு அழைப்பு : நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை

ஸ்டாலினிடமிருந்து டக்ளஸிற்கு அழைப்பு : நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தை

0

தமிழக (Tamil Nadu) முதலமைச்சர் ஸ்டாலினுடனான (Stalin) சந்திப்பிற்காக அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இந்திய தேர்தலிற்காக கச்சதீவு விவகாரம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.

இலங்கையிலுள்ள பழங்குடிகள் தொடர்பில் வெளியான தகவல்

காண்காணிப்பு நடவடிக்கை

இந்நிலையில், நாட்டுக்குள் வருபவர்களை கண்காணிக்க
காண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நரேந்திர மோடி
குறிப்பிட்டுள்ளார்.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதுவரை காலமும் இலங்கை கடற்படை தொடர்பில்
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துமீறல்களை கட்டுப்படுத்த
கடற்படையினர் எடுத்த நடவடிக்கையை பல்வேறு விதமாக பேசினர்.

ஆனால், இந்தியாவே இவ்வாறு கண்காணிப்பில் ஈடுபட்டால் நிலைமை சிறந்ததாக அமையும்.
தமிழக முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி (Puducherry) முதலமைச்சர் ஆகியோர் கலந்துரையாடுவதற்காக என்னை
அழைத்துள்ளனர்.

அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதியளிக்கும்
பட்சத்திலேயே குறித்த சந்திப்பிற்கு செல்வேன் என கூறியுள்ளேன். 

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு கிடைக்கும் : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

தமிழக – இலங்கை கப்பல் சேவை

தமிழகத்திற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவை குறித்த நடவடிக்கை மீண்டும் இழுபறிக்குள் சென்றுள்ளது. அதனை மீண்டும்
ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்கள் அருகில் உள்ள பிரதேசங்களை கடந்து
கொழும்பிற்கு செல்கின்றன. அந்த பொருட்கள் மீண்டும் யாழ் உள்ளிட்ட பகுதிக்கு
கொண்டு வரப்படுகின்றன.

இதனால், வீண் செலவுகள் ஏற்படுகின்றன. அதனை குறைக்கவே
முயல்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்குமான சேவையை மேற்கொள்வதில் தென்னிலங்கை
அரசியல்வாதிகள் விரும்பாமல் தடுப்பதாக கூறப்படுகின்றமை உண்மையா என அமைச்சரிடம்
வினவியபோது அதனை அவர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version