Home இலங்கை அரசியல் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படும் சிறீதரனின் சகாக்கள்! சுமந்திரனின் எல்லை மீறும் நடவடிக்கை

தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படும் சிறீதரனின் சகாக்கள்! சுமந்திரனின் எல்லை மீறும் நடவடிக்கை

0

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜீவராசாவுடன் மாகாண ஆளுநரை சந்தித்து தொடர்பில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனுக்கு
தமிழரசுக்கட்சியிலிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் இருக்ககூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் குமாரசிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டார்.

அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறி மாவட்டக்கிளை தீர்மானமெடுத்தது, எனினும் இன்றுவரை அது தொடர்பில் நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

கடந்தவருடம் தமிழரசுக்கட்சியின் 75ஆவது நினைவுநாளில் யாரை நீக்க வேண்டுமென கட்சி தீர்மானமெடுத்தார்களோ அவருடன் கேக் ஊட்டி கொண்டாடும் புகைப்படம் வெளியாகியது.

அந்தவகையில் தமிழரசுகட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு சட்டம் சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்தவர்களுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் விளக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version