Home இலங்கை சமூகம் யுத்த வடுக்களுக்கு சர்வதேச நீதி கோரிய புலம்பெயர் தமிழர்கள்!

யுத்த வடுக்களுக்கு சர்வதேச நீதி கோரிய புலம்பெயர் தமிழர்கள்!

0

இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச நீதி அவசியமானது என புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டு தாம் வாழும் நாடுகளில் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்த முறையும் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தினர்.

பிரித்தானிய தமிழர்

அந்த வகையில், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் லண்டினில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்று உயிர்நீத்த தமது உறவுகளை உணர்வுப்பூர்வமாக நினைவுக்கூர்ந்ததுடன், அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

இதன்போது, திரண்ட தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், தமிழ் மக்களுக்கான நீதி சர்வதேச ரீதியில் நிலைநாட்டப்படுவதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version