Home இலங்கை சமூகம் வவுனியா முகாமில் உணவின்றிக் கொல்லப்பட்ட தமிழர்கள்: நீதிக்கோரும் தாயக தரப்பு

வவுனியா முகாமில் உணவின்றிக் கொல்லப்பட்ட தமிழர்கள்: நீதிக்கோரும் தாயக தரப்பு

0

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் 70ஆயிரம் பேர் தான் வன்னிப்பகுதியில் இருக்கின்றார்கள் என உணவு அனுப்பப்பட்டதே தவிர மீண்டும் அவர்கள் வவுனியா முகாமிற்கு போய் திரும்பி வரும்போது 420,000 பேர் என்று காட்டப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேற்குறிப்பிட்ட 420,000 பேர் மக்கள் இங்கே இருந்த பொழுது 70,000 பேருக்கு தான் உணவு அனுப்பப்பட்டது என்றால் மிகுதியானவர்கள் உணவில்லாமலே அங்கு கொல்லப்பட்டதாகவும் இது நேரடியாகவே உலகம் பார்க்கின்ற ஒரு இனப்படுகொலை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் முத்தையன்கட்டிலே இராணுவத்தினால் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது, கடற்படையினரால் இளைஞர்கள் தாக்கப்படுவது,  காவல்துறையினரின் அராஜகத் தன்மைகள், வேற்று மொழி பேசுகின்ற படைகள் குவிக்கப்பட்டு தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்ற தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் பல முன்மொழிவுகள் வழங்கப்பட்டாலும் ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்கள் மீது தான் இந்த இனப்படுகொலை நடைபெற்றது என குறிப்பிடாமல் மேலோட்டமாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை திருப்தியானதாக இல்லை, ஆனால் அறிக்கையை  நாங்கள் எதிர்க்கவில்லை வரவேற்கின்றோம். ” என தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

https://www.youtube.com/embed/P4HZsecRCAI

NO COMMENTS

Exit mobile version