Home இலங்கை சமூகம் செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் – தடையும் விதிக்கப்போவதில்லை – அநுர அரசின் அறிவிப்பு

செம்மணியில் புதைக்கப்பட்ட குடும்பங்கள் – தடையும் விதிக்கப்போவதில்லை – அநுர அரசின் அறிவிப்பு

0

அரியாலை சித்துப்பாத்தி புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என ‘மக்கள் செயல்’ என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ‘அணையா விளக்கு’ மூன்று நாள் கவனவீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி (அரியாலை) மனித புதைகுழியை பார்வையிடவும் மக்களை சந்திக்கவும் தடையற்ற அனுமதி
வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

தடையும் விதிக்கப்போவதில்லை

கடந்தகால மனித உரிமைகள் மீறலைக் கையாள்வது குறித்த நாட்டின்  நல்லிணக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால் மனித உரிமைகள் ஆணையாளர்
மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கும் எந்த
தடையும் விதிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐ. நா. மனித
உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்று திங்
கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரும் அவர் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இதன் போது அவர் யாழ்ப்பாணத்துக்கும் திரு
கோணமலைக்கும் வருகை செய்ய உள்ளார்.

https://www.youtube.com/embed/fx1UMbOaX9s

NO COMMENTS

Exit mobile version