யாழ்ப்பாணம் (Jaffna) – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று
பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வசாவிளான் – சுதந்திரபுரம்
பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண்ணின் சடலமே நேற்று (22) இவ்வாறு
மீட்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”குறித்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.
தவறான முடிவு
இந்நிலையில்
அவர் நேற்று முன்தினம் இரவு (21) தூக்கத்துக்கு சென்றுள்ள நிலையில் நேற்று காலை அவரை
காணவில்லை.
அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்ட நிலையில் சடலமானது
மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.
குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/m1rUiYLA4FY
