Home இலங்கை அரசியல் ஒரு நாடு இரு நீதி: இராணுவ கட்டுப்பாட்டில் முடக்கப்படுமா மாவீரர் தினம் – எழுந்துள்ள அச்சம்

ஒரு நாடு இரு நீதி: இராணுவ கட்டுப்பாட்டில் முடக்கப்படுமா மாவீரர் தினம் – எழுந்துள்ள அச்சம்

0

ஈழ மண்ணில் ஈழத் தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் மொழி உரிமைக்காகவும்தான் தமிழ் உறவுகள் தம்மை ஆகுதியாக்கிப் போராடினார்கள்.

இவ்வாறு உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் வருடா வருடம் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பது வழமை.

இருப்பினும், யுத்த காலத்தில் தான் தமிழ் உறவுகள் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்பட்டார்கள் என்றால் உயிர் நீத்த பின்பும் ஒரு நினைவேந்தலை சுதந்திரமாக கொண்டாட முடியாத அளவிற்கு தற்போது வரை அவர்கள் ஒடுக்கப்பட்டே வருகின்றனர்.

காரணம் காலம் காலமாக எதாவது ஒரு ரீதியில் கடந்த அரசாங்களினால் அந்நிகழ்வுகள் ஒரு வரையறைக்குள் மட்டுபடுத்தப்பட்டு சுதந்திரமான நினைவேந்தல் அங்கு கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற 36 ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் அண்மையில் ஜனாதிஜபதி அநுர குமார திஸாநாயக்க பங்கேற்றிருந்தார்.

இந்தநிலையில், அங்கு உயிர் நீத்த உறவுகளுக்காக குரல் கொடுத்த அநுர குமார திஸாநாயக்க தமிழ் உறவுகளுக்கும் பாரபட்சமின்றி குரல் கொடுப்பாரா என்ற ரீதியில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது.

காரணம், அநுர குமார திஸாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் கொடுத்துள்ள இடம் அந்தளவிற்கு பெருமதிக்குரியதும் மற்றும் நம்பிக்கைகுரியதும் ஆகும்.

காலம் காலமாக இருந்த பாரம்பரிய தமிழ் கட்சிகளை புறந்தள்ளி அநுர குமார திஸாநாயக்கவை அங்கீகரித்தவர்கள்தான் தமிழ் மக்கள் என்ற அடிப்படையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு சுதந்திரமான ஒரு பாதையை உருவாக்குவதற்கு அவர் நிச்சயம் கடமைப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், இவ்வருட மாவீரர் தினம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு, முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, தமிழ் அரசியல் தலைமைகளின் இது குறித்த நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கீழ்வரும் காணொளி,     

  

https://www.youtube.com/embed/vXMqw0b86qQ

NO COMMENTS

Exit mobile version