Home இலங்கை அரசியல் கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

கொழும்பில் மகிந்தவிற்கு வீடு வழங்க முன்வந்த தமிழர் : எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்

0

கொழும்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) வெளியேற்றத்தை தடுப்பதற்காக கொழும்பிலே நான்கு பேர் வீடு தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். 

இந்த நான்கு பேரிலே ஒருவர் தமிழர் என சொல்லப்படும் நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ் மக்களுக்கு மகிந்த ராஜபக்ச செய்த பிரதியுபகாரத்திற்காக இந்த வீடுகளை தமிழர் தரப்பிலே இருந்து ஒருவர் வழங்க போகின்றாரா?

ராஜபக்சக்களினுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்த வேதனைகளுக்கு பிரதியுபகாரமாக இந்த வீடு வழங்கப்படப் போகின்றதா?

தமிழர் தரப்பு மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மிகப்பெரிய நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றது.

அதாவது அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடத்தப்பட்டது.

அரச தரப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் குறித்த வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் சபையில் இல்லை.

நாடளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைத் தவிர யாரும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இது போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்றது இன்றைய அதிர்வு……..

https://www.youtube.com/embed/WcCVSuEFYpQ

NO COMMENTS

Exit mobile version