தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் யாரை பாதுகாக்க வேண்டும் யாரை பாதுகாக்க கூடாது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரை சுமந்திரன்(sumanthiran), எமது சர்வதேச விசாரணையை நீர்த்து போக சொன்ன ஒரு நபர்.
அரசியலமைப்பை மாற்றும்போதும் அவரை தமது பிரதிநிதியாக எடுக்கப்போகின்றார்கள். அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை.அப்படியான நிலையில் தமிழருக்கு கடைசி சங்கும் ஊதப்படும்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இருக்காது.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (ramanathan archchuna)தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/2w6B94MPKm8
