Home இலங்கை சமூகம் கல்வியில் பட்டம் பெற்றிருந்தாலும் இந்த தவறை செய்தால் வேலை இல்லை! இலங்கை பொலிஸ் அறிவிப்பு

கல்வியில் பட்டம் பெற்றிருந்தாலும் இந்த தவறை செய்தால் வேலை இல்லை! இலங்கை பொலிஸ் அறிவிப்பு

0

பச்சை குத்திய நபர்கள் பொலிஸ் திணைக்களத்திலோ அல்லது முப்படைகளிலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸில் சேருவதற்கான விதிகளை சுட்டிக் காட்டும் மூத்த பொலிஸ் அதிகாரியின் காணொளியை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளியிலே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை இல்லை

நீங்கள் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் பச்சை குத்தியிருந்தால், இலங்கை பொலிஸிலோ அல்லது முப்படைகளிலோ நீங்கள் பணியமர்த்தப்பட மாட்டீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு. உங்கள் சருமத்தை அழிப்பது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே பச்சை குத்திய நபர்களுக்கு பொலிஸ் திணைக்களத்திலோ அல்லது முப்படைகளிலோ பணி புரிவதற்கான வாய்ப்பு வழங்கப்படாது.

NO COMMENTS

Exit mobile version