ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலை இருப்பதால் நாங்கள் இலகுவாக வெல்லக் கூடிய
சூழ்நிலை உள்ளது என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற
தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை இன்று (17.03.2025) செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும், “மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கான
கட்டுப்பணத்தினைச் செலுத்தியுள்ளோம்.
காத்தான்குடி நகரசபையைத் தவிர்த்து ஏனைய
சபைகளுக்கான கட்டுப்பணம் இன்று எம்மால் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 96000 வாக்குகளைப் பெற்றிருந்தோம்.
இந்த
உள்ளூராட்சித் தேர்தலில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஒரு இலட்சத்து
ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறும் வகையில் தேர்தல் வியூகங்களை
அமைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
