Home இலங்கை அரசியல் மக்களுடன் முரண்படும் சில அரச அதிகாரிகள்! சபையில் முன்வைக்கப்பட்டுள்ள காரணம்

மக்களுடன் முரண்படும் சில அரச அதிகாரிகள்! சபையில் முன்வைக்கப்பட்டுள்ள காரணம்

0

சுற்றாடல் அதிகார சபை அல்லது சுற்றாடல் சம்பந்தப்பட்ட செயற்பாடலுக்கு தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள் மக்களுடன் உடன்பட மொழி தெரியாது என்பதனால் மக்களுடன் முரண்படுகின்ற சூழ்நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.

புத்த சாசன மதம் மட்டும் கலாசார விவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளின் போது உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மொழிப் புலமை இல்லை

இது குறித்து மேலும் கூறுகையில், சுற்றாடல் அதிகார சபை அல்லது சுற்றாடல் சம்பந்தப்பட்ட செயற்பாடலுக்கு தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு சரியான மொழிப் புலமை இல்லை.

இதன் காரணமாக அவர்கள் அரசு செயற்பாட்டை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியாமல் உள்ளது.

அத்துடன் சில நேரங்களில் மக்களுடன் உடன்பட மொழி தெரியாது என்பதனால் மக்களுடன் முரண்படுகின்ற சூழ்நிலையும் காணப்படுகிறது.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது அமைச்சர் உடனடியாக இவ்வாறான மொழி தெரியாத அல்லது மொழி புலமை அற்ற அதிகாரிகளை குறிப்பிட்ட பிரதேசங்களில் நியமிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version