Home இலங்கை பொருளாதாரம் வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

நாட்டில் உள்ள குடிமக்களுக்கு இதுவரை மொத்தம் 6.8 மில்லியன் வரி செலுத்துவோர் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான ஆணையர்கள் சங்கத் தலைவரும் மூத்த ஆணையருமான எம்.ஏ. பிரியங்க தெரிவித்துள்ளார்.

இதனால் அவர்கள் அரசாங்க சேவைகளைப் பெறுவது எளிதாகிறது என்றும் எம்.ஏ. பிரியங்க குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு வருமான ஆணையர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டிஜிட்டல் அடையாளக் குறியீடு

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசாங்க சேவைகளைப் பெறுவதை எளிதாக்க டிஜிட்டல் அடையாளக் குறியீடு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 46 சதவீதத்தினருக்கு டின் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த எண்களை வழங்குவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் பின்பற்றப்பட்ட நடைமுறையும் சிக்கலானது என்று அவர் கூறியுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

எனவே, இதனை பெறுவதன் மதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மக்களுக்குக் கற்பிப்பதும் அவசியம் என்று உள்நாட்டு வருமான ஆணையர்கள் சங்கத் தலைவரும் மூத்த ஆணையருமான எம்.ஏ. பிரியங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் டின் எண்களை பெறுவது என்பது, அவர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டியவர்கள் என்று அர்த்தமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.youtube.com/embed/bcZUfFoBgS0

NO COMMENTS

Exit mobile version