Home இலங்கை சமூகம் தேநீரின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தேநீரின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

0

பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தை அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் (Harshana Rukshan) தெரிவித்துள்ளார். 

இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரு கோப்பை தேநீரின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பால் மா விலை

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 1,100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version