Home முக்கியச் செய்திகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்…! தற்போதைய நிலை

தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன்…! தற்போதைய நிலை

0

விளக்கமறியலில் வைக்கப்பட்ட  காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் அங்குள்ள சாதாரண பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (19) காலை நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு

2023.12.31 ஆம் திகதி வெலிகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுற்றுலா ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன், தொடர்புடைய காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 6 பேரை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்திருந்தது.

தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னக்கோனால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேல்முறையீட்டு நீதிமன்றினால் கடந்த 17 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

காவல்துறை அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று  மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னக்கோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

[UFA3HUM
]

https://www.youtube.com/embed/YLJtPvqKhdc

NO COMMENTS

Exit mobile version