Home இலங்கை சமூகம் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

முல்லைத்தீவில் (Mullaitivu) தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின் ஒளிப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (07.09.2024) இடம்பெற்றுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது நேற்று முன்தினம் (06) புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் கைத்தொலைபேசி மூலம் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு

இதனையறிந்த தேர்தல் கடமையில் இருந்த அதிகாரிகள் மேற்படி ஆசிரியர் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, முல்லைத்தீவு காவல்துறையினர்  மேற்கொண்ட விசாரணையில் மேற்படி ஆசிரியர் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்த வாக்குச்சீட்டைப் படம் எடுத்தமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version