Home இலங்கை சமூகம் வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவல் !

வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவல் !

0

பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்று தீப்பரவலுக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையினர்

அத்தோடு, தீ பரவாமல் தடுக்க இராணுவம், காவல்துறையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையெனவும் இதன் காரணமாக மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை வீதியின் ஒரு பகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Source: https://ibctamil.com/article/a-massive-fire-broke-out-in-a-trading-post-1725743239

NO COMMENTS

Exit mobile version