இடமாற்றுக் கொள்கையில் தற்போது உள்ள அரசாங்கம் பழி வாங்குவதாகவும் அதற்கு எதிராக வடக்கில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும் நேற்றைய தினம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தாங்கள் எதிர்கொள்ளும்
பிரச்சினை மற்றும் தமது இடமாற்றுக் கொள்கையில் தற்போது உள்ள அரசாங்கம் பழிவாங்குகின்றது.
இதனால் திங்கட்கிழமை மாகாண கல்வி
திணைக்களத்துக்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளேம்” என கூறியுள்ளார்.
