பிற்பகல் 2:00 மணி வரை பாடசாலை நேரத்தை நீடிக்கும் திட்டம் உட்பட முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் திரும்பப் பெறக் கோரி, அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடு தழுவிய ரிதியில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர் கூறுகையில், பல தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு
பொதுவாக அரசாங்கத்தை ஆதரிக்கும் தொழிற்சங்கங்கள் கூட முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன என்று சுமங்கல தேரர் மேலும் கூறினார்.
தாங்கள் எழுப்பிய கவலைகளை கருத்தில் கொள்ளாமல் நீடிக்கப்பட்ட பாடசாலை நேரங்களின் அடிப்படையில் அரசாங்கம் ஏற்கனவே கால அட்டவணைகளை தயாரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
விரிவுபடுத்தப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் ஒரு நெகிழ்வான கொள்கையை பின்பற்றத் தவறினால், அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு அப்பாலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி நிபுணர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வணக்கத்திற்குரிய உலபனே சுமங்கல தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
