Home முக்கியச் செய்திகள் ஆசிரியர் பணிப்புறக்கணிப்பினால் மாணவர்களுக்கு நேர்ந்துள்ள கதி

ஆசிரியர் பணிப்புறக்கணிப்பினால் மாணவர்களுக்கு நேர்ந்துள்ள கதி

0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பல பாடசாலைகளில் மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சீரற்ற காலநிலை நிலவிய போதிலும் இன்று (27) காலை பல பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகவீன வீடுமுறையை அறிவித்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பல பாடசாலைகளின் மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

விடுமுறை

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், தபால் நிலையங்களுக்கு சென்று, விடுமுறை எடுப்பதாக மின்னஞ்சல ஊடாக பிராந்திய கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் நேற்றையதினம் கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

பணிப்புறக்கணிப்பு

இதன்போது, நீதிமன்ற தடைகளை மீறி செயற்பட்டமையால் அதனை கட்டுபடுத்த அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தபட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றும்(27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

எனினும், நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்று வழமைப்போல் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version