Home முக்கியச் செய்திகள் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள்: யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் கோரிக்கை

உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள்: யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் கோரிக்கை

0

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

விசர் நாய் கடி தொடர்பாக நேற்று (27.6.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விசக் கடிக்கு தீண்டப்படும் போது 5 நிமிடங்கள் நீரினால் கழுவ வேண்டும்.

அவதானமாக இருக்க வேண்டும்

சவர்க்காரம் இட்டும் கழுவலாம் பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். வைத்தியர்களிடம் நாய் அல்லது பூனை தொடர்பாக முழுவிபரத்தை தெரிவிக்க வேண்டும்.

தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாய்கள் கடிக்கும் போது அதில் கிருமிகள் இருக்காது.

ஆனால் தெரு நாய்கள் கடிக்கும் போது கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இதேவேளை, விசர்நாய்க் கடிக்கு இலக்கான சிறுமியொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி (Kilinochchi) – குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version