லங்கா பிரீமியர் லீக் (LPL) அணியான ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவுள்ள 2026 லங்கா பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்கு முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், விளையாட்டுத் துறை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்த தொடர் விசாரணையின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
https://www.youtube.com/embed/ObPN8-nVjZc
Source: https://ibctamil.com/article/team-owner-lpl-franchise-jaffna-kings-arrested-1784269031
