Home இலங்கை அரசியல் அர்ச்சுனாவால் கண்ணீர் புகை கருவிகள் இலங்கைக்கு திடீர் இறக்குமதி!

அர்ச்சுனாவால் கண்ணீர் புகை கருவிகள் இலங்கைக்கு திடீர் இறக்குமதி!

0

ஐரோப்பாவில் தற்போது தங்கியுள்ள யாழ். மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பத்து மில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பெற்ற நிலையில் மீண்டும் அவர் புலம்பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டுவதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தன்னிடம் தற்போது உள்ள பணம் ஐரோப்பாவில் செலவுகளைச் சமாளிக்க போதாது என்பதால் தனது தனிப்பட்ட வங்கிக்கணக்குக்கு நிதியை அனுப்புமாறு அவர் கோருவதாகவும் கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், தனது தற்பாதுகாப்புக்கு என வெளிநாட்டிலிருந்து கண்ணீர்புகை சாதனங்கள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்களை நாட்டுக்குள் கொண்டு வர (ரிவோல்வர் , பிஸ்டல் மற்றும் நீண்ட தூரத்துக்கு பாயும் கண்ணீர்புகை சாதனங்கள்) அனுமதி வழங்குமாறு சிறிலங்கா காவற்துறை மா அதிபருக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம் மற்றும் இந்த விடயத்தில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தலையீடு உட்பட அதற்குப் பின்னால் உள்ள பரபரப்பான விடயங்களும் பகிரங்கமாகியுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் தொட்டுவருகின்றது செய்திவீச்சு….

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

https://www.youtube.com/embed/w7comHsbF3M

NO COMMENTS

Exit mobile version