நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கட்டாயம் தற்காலிகமாக பதவி விலக வேண்டும் என ரெலோவின் மத்திய குழு உறுப்பினர் ஏகநாதன் விஜயபவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிரிழந்த ஜெயராம் சுரேஷ் விவகாரம் தொடர்பில் கட்சியின் ஒரு அடிமட்ட தொண்டன் சம்மந்தப்பட்டிருந்தால் தலைமைக்குழு என்ன செய்திருக்கும் ?
குறித்த குழுவில் 18 பேர் கூடியுள்ள நிலையில் ஒருவருக்கு கூட செல்வம் அடைக்கலநாதனை குற்றம் நிரூபிக்கப்படும் வரை தற்காலிகமாக பதவி விலக கோர தைரியம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், செல்வம் அடைக்கலநாதனின் தற்போதைய சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம், அவரின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரின் பதவி விலகல் என்பவை தொடர்பில் ஏகநாதன் விஜயபவானந்தா தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய சக்ரவியூகம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/Exhkx4K6gEs
