நாகர்ஜுனா
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் நாகர்ஜுனா.
இவர் இப்போது தனுஷின் குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட நாகர்ஜுனா கலந்து கொண்டிருந்தார்.
தற்போது இவரது வீட்டில் தான் இன்று திருமண விசேஷம் நடந்துள்ளது.
நாகர்ஜுனா-அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனிக்கு இன்று காலை திருமணம் நடந்துள்ளது.
படு சிம்பிளாக நடந்து முடிந்த நடிகர் கிருஷ்ணாவின் திருமணம்.. அழகிய ஜோடியின் போட்டோ
திருமணம்
நாகர்ஜுனாவின் 2வது மகன் அகில் அக்கினேனி, ஜைனப் என்ற பெண்ணை காதலித்தார்.
கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா வீட்டில் மிகவும் எளிமையாக அகில்-ஜைனப் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமண புகைப்படங்கள் வெளியாக புதிய ஜோடிக்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
