Home முக்கியச் செய்திகள் தமிழர் பிரதேசத்தில் ஆலயத்தில் திருட்டு : நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் காவல்துறையினர்

தமிழர் பிரதேசத்தில் ஆலயத்தில் திருட்டு : நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் காவல்துறையினர்

0

மட்டக்களப்பில் (Batticaloa) ஆலயம் ஒன்றின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி எல்லை நகர் பகுதியில்
அமைந்துள்ள ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலயத்தின் கும்பாபிஷேக பணிகளுக்காக ஆலய
எழுந்தருளி விக்கிரகம் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த விக்கிரகங்கள் பூசை பொருட்கள்
உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள
மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பரிபாலன சபையினர்

இந்தநிலையில், மூலஸ்தானம் உடைக்கப்பட்டு
சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் உண்டியலும்
உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அங்கிருந்த சீசீரீவி கமராவிலும் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினரால் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை எந்த வித நடவடிக்கைகளும்
முன்னெடுக்கப்பட வில்லை என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version