பல்வேறு காட்டு விலங்குகளின் இறைச்சியுடன் அனுராதபுரத்தில் உள்ள ஒரு முக்கிய மத ஸ்தலத்தில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(18.11) வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, விஹாரபுலங்குளம பகுதியை சேர்ந்த 49 வயதான பூசாரி ஒருவர் ஆவார்.
மேலதிக விசாரணை
சந்தேகநபரிடமிருந்து, அழுங்கு, ஆமை, சிறிய மான் வகை ஒன்றின் இறைச்சி ஆறு கிலோகிராம் உட்பட, 14 ஆமை முட்டைகள், 06 பால் ஆமைகள் மற்றும் யானை தந்தத்தால் ஆன ஆபரணம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், தனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளதாகவும் அதனை போக்குவதற்காக இவற்றை தனது நண்பர் வழங்கியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
