Home முக்கியச் செய்திகள் பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முன்னாள் அமைச்சர் கோரிக்கை

பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முன்னாள் அமைச்சர் கோரிக்கை

0

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக தம்மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை முன்வைத்து அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மோஷன் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு

இதன்போது, முறைப்பாட்டாளரான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு (Bribery Commission), மனு தொடர்பாக முன்னிலையாகும்போது இந்த கோரிக்கையை விடுக்குமாறு நீதவான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த மனுவில் கோரப்பட்ட விடயங்கள் தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version