10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றம் மேற்படி தண்டனையை அறிவித்தது.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்கள்
இதற்கமைய 9 ஈரானியர்கள்(iran) மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு(pakistan) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது மரணதண்டனை நிறைவேற்றப்படுவது இல்லையென்பதால் இவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுவர்.
அண்மைக்காலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.