Home முக்கியச் செய்திகள் விரைவில் பதவிகளை துறக்கவுள்ள பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

விரைவில் பதவிகளை துறக்கவுள்ள பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக சுமார் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் பதவி விலகல் செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக, முதலமைச்சர் வேட்பாளர் பதவியைப் பெறுவதற்காக பல அரசியல் கட்சிகளுக்கு இடையே தற்போது போட்டி நிலை உருவாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

அதன்படி, இந்தப் பதவிகளில் ஆர்வமுள்ளவர்களில் பெரும்பாலோர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறு போட்டியிட விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை தங்களுக்கு வழங்குமாறு தொடர்புபட்ட கட்சித் தலைவர்களிடம் அவர்கள் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version